Thursday, November 28, 2013

வெற்றி நிச்சயம்


ஹாய் பிரண்ட்ஸ் , நாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகிறோம் . ஆனால் , அனைவராலும் வெற்றி பெறமுடிவதில்லை . இந்த காரியத்தில் ஏன் என்னால் வெற்றி பெற இயலவில்லை என்று பலரும் யோசிப்பதில்லை ; மாறாக , அவ்வளவு தான் என் விதி என்று விட்டுவிடுகிறோம் . ஆசை மட்டும் இருந்தால் வெற்றி கிட்டாது . ஆசையுடன் சில செயல்களையும் மேற்கொண்டால் மட்டுமே வெற்றி கிட்டும் . அதற்கு செய்ய வேண்டியன என்ன ?

இதோ சில டிப்ஸ் உங்களுக்காக ...

* நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும் , நம்பிக்கையும் தேவை . அந்த நம்பிக்கை , " என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும் " என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும் . அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் திறமை உள்ளவராக இருந்தாலும் கூட உங்களால் வெற்றி பெற இயலும் .

* பிரச்னைகள் வரும் போது , நான் இவ்வளவுதான் , இது என் விதி என்று மனம் தளரக் கூடாது . மாறாக , என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும் . அப்படி . நம்பினால் , நீங்கள் புதியவனாக , புதியவளாக மாற முடியும் . அந்த தன்னம்பிக்கை தோல்வியுறுபவர்களை , வெற்றியாளராக்கும் ; சோம்பேறிகளை சுறுசுறுப்பானவர்களாக மாற்றும் .

* உங்கள் இலக்கை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள் . அந்த இலக்கை பாசிடிவ் எண்ணங்களும் , நம்பிக்கைகளும் சூழ்ந்திருக்க வேண்டும் . பின் , ஆக்கப்பூர்வமாக அதை தொடர்ந்து செய்யும் போது உங்களால் வெற்றி அடைய முடியும் .

* தன்னம்பிக்கையும் தைரியமும் நீங்கள் நினைக்கும் எண்ணங்களோடு இணைந்திருக்கும் போது உங்களுக்கு வெற்றி நிச்சயம் . மாறாக , எதிர்மறையான ( நெகடிவ் ) எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் , விளைவும் மோசமானதாகத்தான் இருக்கும் . ஏனென்றால் , < உங்கள் ஆழ்மனம் , உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறது . ஆழ்மனதிற்கு நீங்கள் எதை அனுப்புகிறீர்களோ , அதையே உங்களுக்கு திருப்பி அனுப்புகிறது . உதாரணமாக , தாழ்வுணர்ச்சி , பயம் போன்றவற்றை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் போது , அது உங்கள் ஆழ்மனதினுள் சென்று அதையே திரும்ப அனுப்புகிறது . ஆக , நீங்கள் < உங்கள் மனதினுள் அனுப்புவதையே பெறுகிறீர்கள் .

எனவே , மனதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து , அதில் , ஆரோக்கியமான , ஆக்கப்பூர்வமான , தைரியமான எண்ணங்களால் நிரப்புங்கள் . வெற்றி நிச்சயம் !

Wednesday, September 25, 2013

தன்னம்பிக்கைக் கதை



          ஒரு மான் பிரசவ வலியில் துடித்தது. அது குட்டிகளைப்பிரசவிப்பதற்கு காலியாக இருந்த ஒரு குகைக்கு சென்றது. தனது குட்டிகளை நலமாக பிரசவித்தது. சிறிது காலம் அந்த மானும் தனது குட்டிகளுடன் அந்த குகையிலேயே வசித்து வந்தது.வெகு நாட்களாக வெளியே சென்றிருந்த சிங்கம் அந்த குகைக்கு திரும்பி வந்தது. குட்டிகளை அழைத்துக் கொண்டு ஓட முடியாது என்பதை உணர்ந்த மான் உடனே தன் குட்டிகளிடம்
" சிங்கம் குகைக்கு அருகில்வந்ததும், எல்லோரும் சத்தமாக எனக்கு சிங்கம் கறிவேண்டும் என்று கத்துங்கள்"என்று சொன்னது.
-
சிங்கம் குகை அருகில் வந்த உடன் குட்டி கத்தியதை குகையின் எதிரொலியால் பயங்கரமாக கேட்ட சிங்கம் நம்மைவிட பலசாலியான மிருகங்கள் உள்ளே இருப்பதாக நினைத்து ஓட்டமெடுத்தது.
-
ஒரு நரி, ஓடி வருகிற சிங்கத்தை பார்த்து,
" ஏன் ஓடுகிறீர்கள் ? " என்று கேட்க,
" என்னுடைய குகையில் வேறு ஏதோ மிருகங்கள் குடியிருக்கின்றன. எவை என்னைக் கொள்வதற்கு காத்திருக்கிறது " என்று சிங்கம் சொன்னது. அதை கேட்ட நரி,
" வேறு மிருகங்கள் இல்லை. மானும் அதன் குட்டிகளும்தான் இருக்கிறது. எனக்குத் தெரியும், வாருங்கள் பெரிய மானை நீங்கள் சாப்பிடுங்கள். குட்டிகளை நான் சாப்பிடுகிறேன்.
" என்றது. அதற்கு சிங்கம்,
" சரி வருகிறேன். ஆனால் நீ ஏற்கனவே என்னை ஏமாற்றியவன்,அதனால் உன்னுடைய வாலையும் என்னுடைய வாலையும் முடிந்து கொண்டு செல்வோம் "என்று சொல்லி அதன் வாலைத் தன்னுடைய வாலுடன் பிணைத்துக் கொண்டது. சிங்கத்தை நரி அழைத்து வருவதைப் பார்த்த மான், அருகில் இரண்டும் வந்த உடன்தன் குட்டிகளிடம் சத்தமாக,
" கவலைப்படாதீர்கள் பிள்ளைகளே, இன்று நாம் எப்படியும் சிங்கக்கறி சாப்பிடுவோம், அதை எப்படியாவது அழைத்து வந்து விடுவேன் என்று நரி அண்ணன் சொல்லிச் சென்றுள்ளது. நிச்சயம் நரி அண்ணன் சிங்கத்துடன் வரும் " என்றுசொன்ன உடன்,
இதை கேட்ட சிங்கம் தலைதெறிக்க ஓடியது. அதன் வாலோடு தன் வாலைப் பிணைத்திருந்த நரி அடிபட்டு இறந்தது.
-
- இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்வது, எந்த சூழ்நிலையிலும் தன்நம்பிக்கையும் முயற்சியையும் விட்டுவிட கூடாது. ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் அதை நினைத்து கவலை படுவதாலோ வருத்தப் படுவதாலோ எந்த மாறுதலும் நிகழப்போவதில்லை.அதை நினைத்து கவலைப் படுவதற்கு பதிலாக அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்தால் நடப்பவையாவது நல்லவையாக நடக்கும்.
-
உதாரணம், ஒரு ஒருவழி சாலையில், நீங்கள் இரண்டு சக்கர வாகனம் ஓட்டி கொண்டு செல்கிறீர்கள், அப்போது எதிரே பஸ் அல்லது லாரியோ எதிரே வேகமாக வருகிறது சில நொடிகளில் விபத்து ஏற்பட கூடிய சூழ்நிலை, இந்த தருனத்தில் நீங்கள் அய்யோ என்று பதறினால் ஒன்றும் நிகழப்போவதில்லை உங்களுக்கு நன்மையாக, ஆனால்உங்களின் கவனத்தை எதிரே வருகிற வாகத்தை எப்படி தவிர்த்து ஒதுங்கி போவது என்று சிந்தித்து அதன்படி உங்கள் வாகத்தை செலுத்தினால் அந்த விபத்திலிருந்து தப்பலாம்.
-
ஒரு இக்கட்டான சூழ்நிலையிலிருந்தால் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்று சிந்திக்க வேண்டும் தன் நம்பிக்கையுடன். எனக்கு அதுபோல சூழ்நிலை ஏற்படுவதுண்டு என் மனைவி அய்யயோ இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்படுவதுண்டு நான் அதை பற்றி சிந்திக்காமல் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து அதன்படி செயல்பட ஆரம்பித்து விடுவேன். பிறகுஅந்த சூழ்நிலை மாறியதும் என் மனைவியிடம் சொன்னால் அதற்கு நீங்கள் ரொம்ப அழுத்தம் என்பார்கள்.
எல்லோரும் சூழ்நிலைக் கைதிகளே அதிலிருந்து தப்ப தன்னம்பிக்கையும், பதட்டப்படாமல் இருந்தாலே பாதி வெற்றி, நாம் பயப்படாமல் எதிரில் உள்ளவர்களை சமாளித்தால் மீதி வெற்றி.
-
தன்னம்பிக்கை வேண்டும் பதட்டம் வேண்டாம்... வெற்றி உங்களுக்கே
வெற்றி இன்னும் தொடரும்...
-

Wednesday, September 11, 2013

ஆழ் மனதின் அற்புத சக்திகள்

    



ஆழ் மனதின் அற்புத சக்திகள் நீங்கள் ஒரு தொழிலைச் செய்ய எண்ணும் போது என்ன மனப்பாண்மையில் ஈடுபடுகிறீர்களோ, அதற்கேற்ப உங்கள் செயல் வெற்றி - தோல்வியை அடைகிறது, வெற்றி மனப்பான்மையுடன் செயல் பட்டால் வெற்றியும், தோல்வி மானப்பான்மையுடன் தன்னம்பிக்கையற்று செயல்பட்டால் தோல்வியையும் அடைகிறீர்கள், ஆகவே வெற்றியும், தோல்வியும் உங்கள் மனப்பான்மையிலிருந்து உருவெடுக்கிறது, மன்ப்பான்மை என்பது, உங்கள் உள்ளத்தில் தொடர்ந்து நிலைபெறும் சிந்தனைதான் மனப்பான்மையாக மாறுகிறது, வெற்றி என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் மனச்சித்திரங்களே வெற்றி சிந்தனை , இது மீண்டும் மீண்டும் பதிவாகும் போது வெற்றி மனப்பான்மையாகமாறுகிறது, நீங்கள் விரும்பினால் மனச்சித்திரத்தை மாற்றி ஆழ் மனம் (இதனை சமயோசித அறிவாகக் கொள்ளலாம்) கட்டளை உஙகளுக்கு கைகொடுக்கும், ஆழ்மனக் கட்டளை மூலமும், மனச்சித்திரங்கள் மூலமும் வெற்றி மனோபாவத்தை உருவாக்கிட முடியும், நீங்கள் ஆழ்மனச்சக்தியை பெருக்கி கொண்டால் உழைப்பில் பத்தில் ஒருபங்கு குறைந்தாலும், விளைவு பத்து மடங்காக உயர்ந்திட முடியும், கடும் உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்பதை ஆழ்மனத்திற்கு ஈடு இணை இல்லை என்ற புது பழமொழியை புரிந்து கொள்ளலாம், ஆழ்மனதை ஒரு தேவதை என்றே கூறலாம், அது ஆற்றல் மிக்க தேவதை, உங்களுக்கு விசுவாசமான தேவதை. நீங்கள் கேட்பதை பெற்றுத தரும் சக்தி உண்டு,ஆக அது தேவதையோ, அரக்கனோ என்பது நீங்கள் கொடுக்கும் கட்டளையைப் பொருத்தது. உங்கள் கட்டளையின் எண்ணம் முறன்பாடானால் கிடைப்பதும் முறன்பாடாகவே அமையும், உங்களின் ஆழ்மனச்சக்தி பெருகி விட்டால் நீங்கள் நினைத்ததை விரும்பியவாறு அடைய முடியும். இதன் கருத்தை கொண்டே ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு " Positive thinking always ever success Nagative thinking always never success" எவராயினும், எந்நிலையிலும், ஆழ்மனக்கட்டளையை நம்பிககையோடு கொடுத்து அடையப்போகிறோம் என்னும் விசுவாசத்தை வளர்த்து நினைத்ததை நினைத்தபடியே அடைய முடியும். வேண்டியதை விரும்பியபடியே பெற முடியும். ஒரு குறிக்கோளுக்கான கட்டளையை மட்டும் தேர்வு செய்து கொள்ள வேண்டும், மற்ற விருப்பு வெறுப்பு ஆசைகளை விலக்கி வைத்துவிட்டு, உறங்குவதற்கு முன் படுக்கையில் சம்மனமிட்டு - தியானத்திற்கு அமர்வது போன்று - சுவாசத்தில் ஆழ்மனதை முழுவதையும் கவனத்தில் குவித்தால் எண்ண அலைகள் அடங்கும், நீங்கள் தேர்ந்தெடுத்த ஆழ்மனக்கட்டளையை உணர்ச்சியுடன் , ஒலி நயத்துடன், உதட்டசைவுடன் உருவேற்றுக. உங்கள் குறிக்கோள் நிறைவேறி விட்டது போன்ற நிலையை மனச்சித்திரமாக கற்பனையில் காண்க. இதனை உறங்குவதற்கு முன்பும், உறங்கி எழுந்த பின்னும் தினமும் 30 நிமிடங்கள் கட்டளை கொடுத்தால், உங்கள் ஆழ்மனம் அற்புதமாக செயல்பட தொடங்கிவிடும். ஆழ்மனம் என்பது ஐம்புலங்களால் அறிய இயலாது ஆனால் அதன் விளைவை ஐம்புலங்களால் அறிய முடியும், நிறைவேற போகிறது என்ற நம்பிக்கையுடன் கட்டளை கொடுங்கள். அப்போது ஆழ்மனத்தின் அற்புத சக்தி வெளிப்படும். ஆழ்மனக்கட்டளையை குறிக்கேளுக்கும். தேவைக்கு தக்கபடி நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். உருவாக்கிய கட்டளைகளை உங்களை சுயகருத்தேற்றம் செய்யும் போது வெற்றி உங்களை அடையும். நம் வாழ்க்கை என்பது நம்எண்ணத்தால் உருவாக்கப்படுகிறது. எண்ணத்திற்கேற்ப வாழ்க்கை. எண்ணம் என்பது தொடர்மன சித்திரமே. எணணம் - செயல் ஆகிறது, செயல் - பழக்கம் ஆகிறது, பழக்கம் - வழக்கமாகிறது. வழக்கம் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. ஆழ்மனக்கட்டளை , மனச்சித்திரம் இவ்விரு உத்திகளையும் ஒரே சமயத்தில் தொடர்ந்து பயன்படுத்தும்போது உங்கள் மனோசக்தி பெருக்கம் அடைகிறது. சிந்தனையிலிருந்து - செயல் பிறக்கிறது. மனத்தின் எண்ணமே செயலுக்கு ஊக்கம் . எண்ணம் திண்ணம் பெறும்போது நிைன்த்ததை அடைய வெற்றியாக முடிகிறது. ஆழ்மனக்கட்டளையும. மனச்சித்திரமும் சேர்ந்தது தியானம் - தியானம் தவம் எனப்படுகிறது. தவ வலிமையால் நம் முன்னோர்கள் நம்ப வியலாத அற்புதமான சாதனைகளை செய்ததனர் என்பதை நாம் அறிவோம். ஆழ்மன கட்டளை கொடுக்கும்போதே அதற்கேற்ப மனச்சித்திரம் வரைவதன் மூலம் நீங்கள் அற்புதங்களை நிகழ்த்துபவராக மாறிவிடுகிறீர்கள். உங்களின் நீண்டகால குறிக்கோள்களான தியானம் செய்யும் போது உங்களது நம்பிக்கை ஒரு மந்திர சக்தியாகவே பெருக்கெடுக்கிறது. எனவே ஆழ்மன சிந்தனை - தியானம் மூலம் வெற்றி நிச்சயம்

Monday, August 26, 2013

வெற்றி நிச்சயம்

                           
                         கவிஞர் கண்ணதாசன் வாழ்வில்..அவமானம் ஒரு மூலதனம்...
செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.
நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும்.
இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.
""படு...படுக்கணும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது.
நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.
அவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று "சுமைதாங்கி' என்ற சொந்தப்படம் எடுக்கிறார்.
கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.
நள்ளிரவு ஷூட்டிங்.
ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும்.
ஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.
வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பின்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார்.
""இந்தக் கார்களை கவனித்தீர்களா..?
இவை எல்லாமே நம்முடைய கார்கள்.
வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்பதற்காகப் போலீஸ் நடக்கவிட்டது.
இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன்.
நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது!'' என்றாராம்!
எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார்.
அவமானம் ஒரு மூலதனம்...
இது புரிந்தால் வெற்றி நிச்சயம்!
("வெற்றி நிச்சயம்' என்ற புத்தகத்தில் "அவமானம் ஒரு மூலதனம்' என்ற கட்டுரையில் சுகி.சிவம்..)

Thursday, August 22, 2013

நேர்மறை எண்ணங்கள்



எனக்குள் திறன் இருக்கிறது! எனக்குள் திறன் இருக்கிறது..! எனக்குள் திறன் இருக்கிறது...! நான் சக்தி மிகுந்தவன்! நான் சக்தி மிகுந்தவன்! நான் சக்தி மிகுந்தவன்...! என்னிடம் நேர்மறையான அதிர்வலைகள் இருக்கின்றன.....!

இதெல்லாம் என்ன? மேலே படிக்கல்லாம்,

என் பார்வையின் மிகுதியில் சிக்குவது எல்லாம் பாஸிட்டிவான விசயங்கள்..மட்டுமே...! எல்லா சூழ்நிலைகளுக்கும் தீர்வினை எட்டும் தீர்க்க முடிவுகள் மட்டுமே நான் எடுக்கிறேன் என்று கூறுகிறேன்!

மனிதர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் விசயங்களையும் சிக்கலை கொடுக்கும் விசயங்களையும் எப்போதும் சொல்வதை தவிர்க்கிறேன். என்னிடமிருந்து வாழ்த்துக்களும், பரஸ்பரம் அன்பும், விசாரிப்புகளும் அலைகளைப் போல பரவிக் கொண்டே இருக்கின்ற. 

ஊரின் விடியலுக்கு போராடக்கூடிய பெரிய செயல்கள் செய்ய முடியாவிட்டாலும் ஒரு மண் பானை வாங்கி நீர் ஊற்றி வீட்டுக்கு வெளியே தெருவில் வந்து செல்லக்கூடிய மனிதர்களின் தாகம் தணிக்க வைக்கும் அளவிற்கு திறனுள்ளவன்தான்......... நான்.......நான்........நான்...............!

மேலே சொன்ன மாதிரி தினமும் மனசுக்குள்ளே சொல்லிகிட்டே இருந்தீங்கன்னா நேர்மறையான எண்ணங்கள் நமக்குள்ளே ஆட்டோமேட்டிகா வரும்னு சொல்றாங்க....அது எப்டிப்பா வரும்.. மாயமா மந்திரமா..? 

இங்கே கொஞ்சம் கவனீங்க.....

எதை வலுவாக திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறோமோ அது உண்மை என்று மனது நம்புகிறது. மேலும் மனம் முடிவு செய்யும் தீர்மானமான முடிவுகள்தான் செயலாக மாறுகிறது. உதாரணமாக பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடைக்கு சென்று வாழைப்பழம் வாங்கவேண்டும் என்று நாம் முதலில் நினைக்கிறோம்.

வெறுமனே முதலில் நினைப்பது மனதில் நிகழ்கிறது. அது தீர்மானமான பின்னால்... கடைக்கு சென்று வாழைப்பழம் வாங்கி வருகிறோம். ஸ்தூலமான இந்த உடலை மனதில் தோன்றும் சூட்சுமமான தீர்க்கமான எண்ணம்தானே வழி நடத்துகிறது.

அப்படித்தான் திரும்ப திரும்ப எதை நம்புகிறோமோ (தீர்க்கமாக) அதை வாங்கிக் கொள்ளும் ஆழ் மனது...அதை ஒரு கட்டத்தில் செயல்படவைக்கிறது. அதாவது நாமே அதை செய்கிறோம். நாம் செய்ய வேண்டியதை பெரும்பாலும் செய்யாமல் காலத்தையும் நேரத்தையும் குறை கூறி கொண்டே இருக்கிறோம். இப்போதிருக்கும் நமது நிலைக்கு கடந்த காலத்து நமது செயல்கள்தான் காரணம் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது. அப்படி என்றால் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கபோவது எது? நமது நிகழ்காலத்து செயல்கள்தானே....?

நிகழ் காலத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.. இது ஒரு புரியாத புதிர்.

புறச்சூழ்நிலை, பணவசதி, நமது பிரச்சினைகள் எல்லாம் ஒரு மாயை....அதிலிருந்து தொடர்ச்சியான பாஸிட்டிவ் சிந்தனைகள் மூலம் வெளி வர முடியும் என்று தான் சொல்கிறார்கள். ஒரு விசயத்தை எடுத்துப் பார்த்தால் வெற்றி பெற்றவர்களுக்கு எல்லாம் ஒரே ஃபார்முலாதான் இருந்திருக்கிறது. அவர்கள் எப்போதும் தங்களின் செயல்களிலும் நேரத்திலும் கவனம் வைத்திருந்ததோடு மற்ற மனிதர்களின் நிறையை பற்றி மட்டுமே பேசி இருக்கிறார்கள்.

என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார்... நீ நிலையாமை (இதை பற்றி அப்புறம் பேசுவோம்)பற்றியே நிறைய பேசுகிறாய்.... உடல் பொய்..எல்லாம் மாயை என்று அடிக்கடி சொல்கிறாய் நீ எப்படி நேர்மறை சிந்தனை உடையவனாவாய் என்று.....

சரி நிலையாமை பற்றி பேசுவதும் நேர்மறை என்பதை நண்பர் அறிந்திருக்கவில்லை... ! நிலையாமை உணர்ந்தால் கர்வம் போகும். கர்வம் இல்லை என்றால் அன்பு பெருகும். அன்பு பெருகிறானால் செய்யும் செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஈடுபாடு அதிகரித்தால்... புரடக்டிவிட்டி என்னும் உற்பத்தி திறன் அதிகரிக்கும்.

உற்பத்தி திறன் அதிகரித்தால்... லாபம் கிடைக்கும். லாபத்தினால் பொருள் கிடைக்கும். பொருளினால் இம்மை வாழ்க்கை அல்லது இந்த லெளகீக வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உடல்சார் தேவைகளும் சுற்றங்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் போதும் மனம்.. அடுத்து என்ன என்று ஆராயும் அங்கே.... நமக்கு தேவையான அல்லது எப்போதும் உண்மையான பேருண்மை வெளிப்படும்....இப்போ சொல்லுங்க... நிலையாமை எப்படி எதிர்மறையை போதிக்கும்....அது நேர்மறையின் நிழல்தானே....?

நேர்மறயான எண்ணம் இருந்ததால்தனே... ரூஸ்வெல்ட்.. சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு அமெரிக்க ஜனாதிபதியாயிருந்தார்?

நேர்மறையான எண்ணம் இருந்ததால் தானே.. .மகாத்மா காந்தி.... நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றினை நமக்கு கொடுத்தார்...

மொத்த ஆய்வுக் கூடமும் எறிந்த போது எடிசன் கவலைப்படவில்லை....என் தவறுகள் எரிந்து கொண்டிருக்கின்றன என்றார்...! அந்த நேர்மறைப் பார்வைதானே....இன்று எல்லோருடைய வாழ்க்கையிலும் வெளிச்சம் கொடுத்திருக்கிறது...

வலைப்பூக்களிலும், இணையங்களிலும் மிகுதியாக நிறைந்திருப்பது.....இளைஞர்கள். இளைய இந்தியா.. இன்று குழுமியிருக்கும் இடம்.. இணையம்.....! இதன் பயன்பாடுகள் நேர்மறையாகவும்... பயனுள்ள வகையிலும்...சக்தி மிகுந்ததாகவும் மாற....மிகுதியான விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

இங்கே... எழுத்துரிமை, பேச்சுரிமை, சமூகக் கூட்டுறவு என்று எல்லாமே இருக்கிறது.. ! கண்ணிமைக்கும் நேரத்தில் உலக செயல் பாடுகள்.. மனித மூளைகளின் கவனித்திற்கு வந்து விடுகிறது ஆனால் அணுகும் முறைக்கும், பயன்பாடுகள் பற்றிய தெளிவுக்கும் நேர்மறையான சக்தி மிகுந்த பார்வை தேவைப்படுகிறது.

நேர்மறையான ஒரு பாசிட்டிவ் அவுட் லுக் (இது நம்ம PC OUTLOOK இல்லை, நேர்மறையான நோக்குடன்)நம் இளைஞர்களின் உடனடித் தேவை! 

Tuesday, August 20, 2013

ஆளுமைத் திறன்


ஆளுமைத் திறன் என்பது ஒருவனுடைய சிந்தனையால் அல்லது செயலால் பிறரிடம் ஏற்ப்படும் பாதிப்பை குறிக்கிறது. ஆழ்ந்த, தெளிவான மற்றும் கூர்மையான மனநிலை உள்ளவானின் ஆளுமை பிறரிடம் அதிகமான பதிப்பை ஏற்படுத்துகிறது (உதாரனம்: மகாத்மா கந்தி)
தனிமனிதனின் ஆளுமைதிறன் அவன் வாழ்க்கையையே மாற்றி அம்மைக்கிறது. ஒட்டுமொத மக்களின் ஆளுமைதிறன் சமுதாயத்தையே மாற்றியமைக்கிறது.
ஒருவனுடைய ஈர்ப்பும், எர்ப்பும் அவனுடைய ஆளுமைதிறனை பொறுத்தே அமைகிறது.  பொதுவாக பலமான மனநிலை உள்ளவனின் ஆளுமைதிறன் சற்று பலம் பொருந்தியதாகவும், பலவீன மனநிலை உள்ளவனின் ஆளுமைதிறன் சற்று குறைந்தும் காணப்படுகிறது.
தொடர்ச்சியான பழக்கம், சீரான சிந்தனை, ஆழ்ந்த மனநிலை, ஒருவனுடைய ஆளுமைதிறனை அதிகரிக்கிறது. இவை மற்றவரிதமிருந்து சற்று உயர்வான இடத்தில் வைக்கிறது.
“அணைத்து சக்திகளும் உன்னில் உள்ளன; உன்னால் எதையும், எல்லாவற்றையும் சாதிக்க முடியும்; இதில் நம்பிக்கை கொள்ளுங்கள், பலவீனன் என்று ஒரோபோதும் நம்பாதீர்கள். எழுந்திருங்கள், உங்களுள் இறுக்கும் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்துங்கள். ”  
                                                                                                              -  சுவாமி விவேகனந்தர்.

எண்ணங்கள்


எண்ணங்களே வாழ்க்கையை அமைக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களே அவனது வாழ்க்கைக்கு காரணமாய் அமைகிறது. நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகள், நல்ல சூழ்நிலையை உருவாக்குகின்றன. தீய எண்ணங்கள், தீய சிந்தனைகள், தீய சூழ்நிலையை உருவாக்குகின்றன.
இந்த பிரபஞ்சம் முழுவதுமே என்ன அலைகளால் சூழப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்கையும், சுற்றுப்புறமும், செயல்பாடுகளும் இந்த எண்ண அலைகலாலேயே  வழிநடத்தப்படுகிறது.
நல்ல சிந்தனையை விதைக்கும் மனிதன் நல்ல எண்ண அலைகளால் ஈர்க்கப்படுகிறான். அதே எண்ண அலைகள் கொண்ட மற்றவர்களும் அவன்பால் ஈர்க்கபடுகிரார்கள். அதேபோல் தீய சிந்தனையை விதைக்கும் மனிதன் தீய எண்ண அலைகளால் ஈர்க்கப்படுகிறான்.
நல்ல எண்ணங்களை விதைப்போம், நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.
“மனமிருந்தால் மார்க்கமுண்டு”
சிந்தனைகள் தொடரும்..